திங்கள், 20 ஜூன், 2011

என்ன பெரிய்ய்ய்.......ய ஐ போனு ? what makes iphone so unique?

அனைவருக்கும் எனது வணக்கங்கள் !
இது என்னுடைய முதல் பதிவு, ஆகையால் ஒரு சிறிய அறிமுகம் தேவைப்படுகிறது. பெயர் முக்கியமில்லை எனினும் நோக்கம் என்ன என்பதை நான் தெளிவு படுத்த கடமை பட்டுள்ளேன்.

நம்மில் பலர், பலவகையான தலைப்புகளில் பதிவு எழுதுகிறோம், உதாரணமாக அரசியல், கலை(சினிமாவும் இதில் அடக்கம் என நம்புகிறேன்), விளையாட்டு மற்றும் தொழிநுட்பம் (இன்னும் பல). மேற்கண்ட துறைகளில் எனக்கு சற்று ஆர்வம் மிகுந்த  துறையான தொழில்நுட்பத்தை நான் தேர்தெடுத்து, அது பற்றி எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெரு  மகிழ்ச்சி! என்னுடைய பதிவில் ஏதேனும் இலக்கணப் பிழை இருந்தாலோ அல்லது தவறானா  தகவல் இருந்தாலோ, தயவு செய்து சிறிது காலம் செலவு செய்து என்னை பின்னோட்டங்கள் மூலம் திருத்தவும்! நன்றி !

என்னுடைய முதல் பதிவாக நான் தேர்தெடுத்து இருப்பது ஆப்பிள் நிறுவனத்தாரின்  ஐ போன் உடன்  சில ஆச்சர்யமான "ஆப்பிள்" தகவல்கள்.

"ஆப்பிள்" ஒரு சிறிய அறிமுகம்:
1976 ம் ஆண்டு முட்டாள்கள் தினத்தில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்திற்கு இரண்டு பள்ளியை விட்டு துரத்தப்பட்ட மாணவர்கள் தான் நிறுவனர்கள்!
முதல் சின்னம் (லோகோ)

இன்று, வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு வளர்ச்சியை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. அதே சமயம், எண்களால் விவரிக்க முடியும் என நம்புகிறேன். கிட்ட தட்ட 600 % வளர்ச்சியை மிக குறுகிய காலத்தில் இது எட்டி இருக்கிறது !

விஷயத்துக்கு வருவோம்.....ஐ போன்
மேற்கண்ட வளர்ச்சி, ஒரே ஒரு தயாரிப்பின் (ஐ போன்) மூலம்  ஏற்பட்டது என்பது ஆச்சர்யமான உண்மை. (ஐ பாட்-ம் மிகவும் பிரபலமான தயாரிப்பு தான், ஆனால் ஒட்டு மொத்த நிறுவன வளர்ச்சியில் அது ஐ போன் க்கு நிகர் இல்லை )
(தவிர்க்க முடியாத காரணத்தால்  (தமிழறிவு போதவில்லை), இதற்க்கு மேல் சில பல ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்)


அனைவருக்கும் தெரிந்த வழக்கமான Technical Specification ஐ நான் தரப்போவதில்லை. என் தலைப்புக்கேற்ப, ஆச்சர்யமான சில பல விஷயங்களை தருகிறேன்.

வழியலகு : புறத்தோற்றம்/வடிவமைப்பு/பயன்பாடு
ஐ போன் 4
ஆப்பிள் நிறுவத்தின் தனித்தன்மைகள் பல, அதில் என்னை பொறுத்த வரை முதலாவது, அவர்களின் எளிய பிரம்மாண்டம்! என்னுடைய தயாரிப்பு பல வசதிகள் கொண்டது, அதனால் அது பார்க்கவே மிக ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது; எளிய வடிவமைப்பின் மூலம்  ஆடம்பர தோற்றத்தை கொடுக்கவைக்க முடியும் என்பதற்கு ஆப்பிள் பொருட்களை விட (ஐ போன் உட்பட )விட சிறந்த உதாரணம் எந்த நிறுவனத்திலும்  கிடையாது. 
 (MacBook Air என்ற ஆப்பிளின் மடிகணினியை முதன் முதலாக நான் பார்த்த பொது அன்றிரவு நான் தூங்க முடியவில்லை, இப்படி ஒரு வடிவமைப்பை யாருமே எதிர்பாத்திருக்க வாய்ப்பில்லை...)

CNC(Computer Numerical Control)- ஆல் வடிவமைக்க பட்டது. இதனால் போன்-உடைய கவர் (casing) மிக நேர்த்தியாக உள்ளது. (very precise)
காமடியான எழுத்துக்கள், வாசகங்கள் இல்லை. புரியவில்லையா ? பல போன்களில் நீங்கள் பார்த்த, "5 mega pixel digital camera", "CMOS camera", "microsd", "audio jack", "USB", "3G", "128 MB internal memory", "+", "-", "volume"போன்ற Technical Specification on Mobile cover எதுவும் இல்லை. அட அது use பன்றவனுக்கு தெரியாதா? சும்மா அசிங்கமா அத வேற எழுதிகிட்டு! Apple is Unique on this!

Retina Display- கண்ணைப்பறிக்கும் High resolution screen (அட இத விட நாங்க samsung LED ஸ்க்ரீன் பாத்திருக்கோம்னு சொல்றவரா நீங்க ?) தயவு செய்து மேல படிங்க...மேல இல்லங்க, தொடர்ந்து படிங்கன்னு சொன்னேன்..சுமார் ஏழெட்டு   வருடங்களுக்கு முன்னாள், Colour Display போன்களை சூரிய வெளிச்சத்தில் பார்த்தால் ஒன்றும் தெரியாது...சில பேர், அட Color Display phone waste ப்பா..Black&White phone thaan best ன்னு என்கிட்டே நெறைய பேரு சொல்லிருக்காங்க....(Display readability on Sunlight - measure பண்றதுக்கு ஒரு வழியலகு  இருக்கு அத நான் மறந்துவிட்ட காரணத்தால் என்னால் இங்கு குறிப்பிட முடியவில்லை. மன்னிக்கவும்) உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த போன்களில், சூரிய வெளிச்சத்தில் மிக தெளிவாக பார்க்க முடிகின்ற போன்களின் முதலிடம் நம்ம ஐ போனுக்கு!

Multitasking Phone-களில் மிக அதிகமான வேகத்தில் Application Switching பண்ண முடிவது ஐ-போன் விட சிறந்தது எதுவும் இல்லை. (Double tap the home button and choose the application to switch)

விரல் ரேகை திரையில் படாதிருக்க விசேஷமான Oleophobic Coating உடன் கூடிய ஸ்க்ரீன்.

மிக முக்கியமான பகுதிக்கு வருவோம்....இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விசயமில்லன்னு நீங்க சொல்லலாம்..

ஆனா எனக்கு ஐ-போனில் ஆச்சர்ய படவைத்த அனுபவம் என்னவென்றால், அதன் தொடுதிரை (touch screen). மிக மிக துல்லியமான தொடுதல்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது.....மற்ற போன்களை போல் நீங்க ஸ்க்ரீன் மேல் ஏறி நிற்க வேடியதில்லை. மேலும், இது மிக நேர்த்தியானது..தவறான option களை தேர்தெடுப்பது இல்லை, குறிப்பாக இதனுடைய விசைபலகை (on screen keyboard) மிக நேர்த்தி. தொழில்நுட்ப வாயிலாக சொல்லவேண்டும் என்றால், ஐ-போனில் பயன்படுத்த பட்டுள்ளது     Capacitive Touchscreen with some proprietary Algorithm, மற்ற போன்களில் உள்ளது Resistive Touchscreen. அதனால் துல்லியமாக இருப்பதில்லை. (எதிர்வரும் நாட்களில் நிறைய தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கபோகின்றேன், மேற்கூறிய தொடுதிரையும் சேர்த்து தான், அப்போதுதான் பதிவு முழுமை அடையும் என ஆணித்தரமாக நம்புகிறேன்)

மென்பொருள் புதிபிப்பு:   Software Update
 ஐ-போனுடைய software update க்கு இணை எந்த ஒரு போன் நிறுவனத்தாரும் தர முடியாது..ஒவ்வொரு update லும் நிறைய முன்னேற்றங்கள், வசதிகள் மற்றும் தவறுகள் திருத்தபடுகின்றன. மென்பொருள் பற்றி பேச எனக்கு இரண்டு மூன்று பக்கங்கள் தேவை!

 Earphone கள், காதுகளுக்குள் வசதியாக பொருந்துகின்றன....ஆனால், ஒலியின் தரம் சுமார் ரகம். (இது ஏன் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நான்கைந்து பக்கங்கள் தேவைப்படும், எனவே Headphones & Noise Cancellation Techniques என்று ஒரு தனி பதிவு வரும் வரை காத்திருக்கவும், கூடிய விரைவில் )

தயவு செய்து வழக்கமான கேள்வியான பாட்டரி life பற்றி கேட்காதீர்கள்....நாம் ஸ்மார்ட் போன் பற்றி பேசிகொண்டிருக்கிரோம்...(3.5inch display & 3G data ஐ மறந்து விட வேண்டாம் )
[ஒரு சிறிய automobile உதாரணம்...இந்தியாவில் விற்பனையான இரு சக்கர வாகனங்களில் மிக சிறந்த மற்றும் என்னை மிகவும் கவர்ந்த வாகனமான YAMAHA RX100, மிக குறைவான mileage தரும் ஏனென்றால் அது ரொம்ப பவர்புள் (13.5 bhp) பைக்]

இத்துடன் நான் முடிக்க விரும்புகிறேன்...ஏனென்றால், ஐ-போன் ஆர்வலர்கள் எத்தனை பேர் என்று எனக்கு தெரியாது.....ஒரு வேலை இந்த பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தால்.....ஐ-போனுக்கான பல டிப்ஸ்கள்  தர உள்ளேன்...

ஆர்வமாக உள்ளவர்கள், உங்களுடய ஐ-போன் லாக்கை திறந்து விட்டு, மூன்று விரல்கள் கொண்டு இரு முறை தொடர்ந்து தட்டவும். என்ன நடக்கிறது என்று பாருங்கள் ? திரும்பவும் அதே போல் செய்தல் ஸ்க்ரீன் பழைய நிலைக்கு திரும்பிவிடும் ...பயப்படவேண்டாம். ஒரு வேலை ஒன்னும் நடக்க வில்லை என்றால்... (எப்படி செய்வது ? இதோ Settings->Accessibility->Zoom- ?ON) OFF இல் இருந்தால் இந்த option வேலை செய்யாது...


எந்திரன் படத்தில் வரும்    Speed 1 TeraHertz  உண்மையில்  சாத்தியமா ? இந்த கேள்விக்கு பதில் கூடிய விரைவில்......

மீண்டும் உங்களை ஒரு தொழில்நுட்ப பதிவோடு சந்திக்கிறேன்!


இது என்னுடைய முதல் பதிவு என்பதால் தயவு செய்து தங்களது மதிப்புமிகு பின்னூட்டத்தை பதிவு செய்து குறை/நிறைகளால் என்னை தெளிவுபடுத்தி, ஊக்கபடுத்தவும்!


நன்றி ! வணக்கம்! 
pnitigas